search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண் சிகிச்சை"

    • தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.
    • சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாரத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. கடந்த மாதம் 27-ல் பார்வையிட்டார். அப்போது, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப் பழங்கரை கிராமத்தில் கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை குறைபாடு குறித்து விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார். மேலும் தனக்கு கண் பார்வை பிரச்சினை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உடனடியாக சரி செய்து விடலாம் என சிறுமிக்கு கனிமொழி எம்.பி. நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தார்.

    தொடர்ந்து, கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் அந்த சிறுமிக்கு நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி காலை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மாலை வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து, ஏரல் தாசில்தார் கோபால கிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்துக்கு சென்று சிறுமி ரேவதியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அப்போது அந்த சிறுமிகண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கனிமொழி எம்.பி.யை தனது தாய், தங்கையுடன் நேரில் சந்தித்த சிறுமி ரேவதி அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது சிறுமியிடம் உனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்
    • முழு கண்ணையும் மாற்றி பொருத்துவது இதுவரை நடைபெற்றதில்லை

    கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள், இடது கன்னம், தாடை ஆகியவை முற்றிலும் சேதமடைந்தது.

    இதையடுத்து, மே 27 அன்று நியூயார்க் லேன்கோன் ஹெல்த் எனும் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு புகழ் பெற்ற மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

    விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஆரோனுக்கு பலனளிக்காது என்பதால் "முழு கண் மாற்று அறுவை சிகிச்சை" அவருக்கு தேவைப்பட்டது. ஆனால், ஒருவர் இழந்த முழு கண்ணையும் மீண்டும் வேறொரு கொடையாளியிடம் பெற்றாலும் அதனை பொருத்துவது மருத்துவ உலகில் இதுவரை ஒரு மிக பெரிய சவாலாக இருந்து வந்தது.

    டாக்டர். எடுவர்டோ ரோட்ரிகஸ் (Dr. Eduardo Rodriguez) தலைமையில் ஒரு மருத்துவர் குழு இந்த சவாலான முயற்சியில் இறங்கியது. அவரது மேற்பார்வையில் சுமார் 21 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் ஆரோனுக்கு முழு கண்ணும் வேறொரு கொடையாளியிடம் இருந்து பெறப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சையில் முப்பரிமாண அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.

    தற்போது மாற்றப்பட்ட இடது கண்ணில் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், விரைவில் ஆரோனுக்கு கண் பார்வை கிட்டும் என நம்புவதாகவும் டாக்டர். ரோட்ரிகஸ் தெரிவித்தார்.

    விபத்து மற்றும் பல்வேறு இதர காரணங்களால் கண் பார்வை இழந்தவர்களுக்கு இது ஒரு நற்செய்தி என பல்வேறு பிரபல கண் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • திப்பணம்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை சார்பில் டி.எம்.பி. பவுண்டேசன், திப்பணம்பட்டி கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி யில் நடைபெற்றது. முகாமில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் மீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திப்பணம்பட்டி கிளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • 200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
    • 40-க்கும் மேற்பட்டோரை கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    கடையநல்லூர்:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது. டவுன் கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர்கள் பிலால் ஜலாலுதீன், பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் தொடங்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நவீன் மற்றும் அன்னரோஸ்லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்வ தற்காக அழைத்து சென்றனர்.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டவுன் கிளை நிர்வாகிகள் செயலாளர் ஹாலித், பொருளாளர் முகமது கனி, துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் செய்தனர். முகாமில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி யில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.
    • முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சோம்பட்டு ஊராட்சியில் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல் ஆட்டோமெட்ரி சர்வீஸ் மற்றும் ஜான் டி நுல் ட்ரேடஜிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து நடத்தியசிறு மற்றும் ஒரு தொழிலாளர்களுக்கான நிறுவனம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாவதி ராஜாராம், தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை தலைவர் விஜயலட்சுமி ஒன்றிய கவுன்சிலர் வெற்றி (எ) ராஜேஷ் தொண்டு நிறுவனம் பத்மநாபன் ரகுநாத், வரதன், சசிபாபு, சோம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளர் தமிழரசன், தனியார் கண் மருத்துவமனை டாக்டர் ராஷிமா உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை செய்து இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் அமரர் ராமலிங்கம்- சரோஜா தம்பதியினரின் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடை பெற்றது. முகாமை லயன்ஸ் கிளப் ஆப் ராஜபாளையம் டவுண் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமிற்கு ராஜபாளையம் டவுண் லயன்ஸ் சங்க தலைவர் ஸ்டேன்லி பிரின்ஸ் சித்ரராஜ் தலைமை தாங்கினார். அக்னி என்ற ரவி முன்னிலை வகித்தார். தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி தலைவர் இசக்கி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் உட்பட பலர் முகாமில் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். ராஜ பாளையம் மல்லிகை லயன்ஸ் சங்க பெண்கள் முகாமிற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

    • ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது.
    • மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டையில்  பண்ருட்டி ரோட்டரி சங்க தலைவர் ஐஸ்வர்யா ரவிசேகர்தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று காலை நடந்தது. ஊராட்சி மன்றதலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் சதாசிவம் வரவேற்றார்.மண்டல உதவி ஆளுநர் காமரா ஜ்முகாமை தொடங்கி வைத்தார்.பண்ருட்டி ஜெயம் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் புதுவை அரவிந்த் கண்மருத்துவமனை இணைந்துநடத்திய இந்த முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவ மனை மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சைஅளித்தனர். இதில் எஸ்.வி. ஜூவல்லர்ஸ் அதிபர் அருள்,முந்திரி ஏற்றுமதியாளர் பாரதிதாசன் நளபாகம் ராஜா,பூக்கடை பாலமுருகன் காய்கனி சங்கம் சக்திவேல் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

    • தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் ஹிட்லர் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
    • எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும் என கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா பேச்சு

    சென்னை:

    கண் மருத்துவத்தில் மிகப்பெரிய மற்றும் பிரபல மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மற்றும் அதற்கான சிகிச்சை மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக ஒரு மனிதச்சங்கிலி நிகழ்வை சென்னையில் நடத்தியது. உலக கண் அழுத்த நோய் வாரம் (மார்ச் 12-18, 2023), அனுசரிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இது நடத்தப்பட்டது.

    அதிகரித்த அழுத்தத்தின் காரணமாக பார்வைத்திறன் படிப்படியாக குறைந்து குருடாக்கும் தன்மை கொண்ட இந்த கண் அழுத்த நோய் குறித்தும் மற்றும் அதற்கு உரிய சிகிச்சையை தொடக்க நிலையிலேயே பெற வேண்டிய அவசியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதே உலக கண் அழுத்த நோய் வாரம் அனுசரிக்கப்படுவதன் குறிக்கோளாகும். எனவே இதனையொட்டி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இம்மாநகரில் வாக்கத்தான் நிகழ்வையும் மற்றும் மனிதச்சங்கிலி நிகழ்வையும் ஏற்பாடு செய்து நடத்தியது. டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் பல்வேறு வயது பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட, 150-க்கும் அதிகமான நபர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்விற்கு தென் சென்னையின் காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) ஹிட்லர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

    டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறையின் பிராந்திய தலைவர் டாக்டர். ஸ்ரீனிவாச ராவ் இதுதொடர்பாக கூறியதாவது:

    மீண்டும் சரிசெய்ய முடியாத பார்வைத்திறனிழப்பிற்கு (குருடாதல்) இட்டுச்செல்லும் கண் கோளாறுகளின் ஒரு தொகுப்பான கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) மிக அதிக எண்ணிக்கையில் மக்களிடம் காணப்படுவதால், உலகளவில் இந்நோய்க்கான தலைநகரமாக இந்தியாவை குறிப்பிடலாம். இந்தியாவில் கண் அழுத்த நோயால் 12 மில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் மற்றும் 1.2 மில்லியன் நபர்கள் பார்வையற்றவர்களாக இதனால் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். பிரைமரி ஆங்கிள் குளோஷர் நோய் (முதன்மை கோண மூடல்) பாதிப்பு தென்னிந்தியாவில் 1.58% என்ற அளவில் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் கிராமப்புற மக்களிடையே POAG (முதன்மை திறந்தகோண கண் அழுத்த நோய்) பாதிப்பு 1.62% ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களுள் 98.5% சதவிகித நபர்கள் இந்நோய் பாதிப்பு தங்களுக்கு இருப்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இதுவே நகர்ப்புற மக்களில் 3.51% என உயர்வான விகிதத்தில் காணப்படுகிறது. இவர்களுள் 90% - க்கும் கூடுதலான நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு பங்களிப்பு இருப்பது தெரியாது என்ற தரவு வருத்தத்திற்குரியது.

    கண் அழுத்த நோய் வராமல் முன்கூட்டியே தடுப்பதற்கு இதுவரை அறியப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமில்லை. ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் கண் அழுத்த நோய் வெளிப்படுத்துவதில்லை என்பதால், ஆரம்ப நிலையிலேயே நோய் பாதிப்பு இருப்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்வதும் மற்றும் உகந்த சிகிச்சையைப் பெறுவதுமே பார்வையைப் பறிக்கின்ற இந்த கடுமையான நோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறையாகும். கண் அழுத்த நோயின் காரணமாக, பார்வை முற்றிலும் பறிபோகாமல் தடுப்பதற்கு இதுவே ஒரே வழிமுறையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். கே. சுகிபிரியா பேசுகையில், "எந்த வயதிலும் கண் அழுத்த நோய் ஒருவரை பாதிக்கக்கூடும். எனினும் 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கண் அழுத்த நோய் பாதிப்பு வரலாற்றைக் குடும்பத்தில் கொண்டிருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் உயர்ந்த ஒளிவிலகல் குறைபாடுகள் உள்ளவர்கள், ஸ்டீராய்டை உள்ளடக்கிய கண் சொட்டு மருந்து, மாத்திரைகள், இன்ஹேலர்கள் மற்றும் சருமக் க்ரீம்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் கண் அழுத்த நோயால் பாதிப்பிற்கு ஆளாகக்கூடிய இடர்வாய்ப்புள்ள நபர்களாக கருதப்படுகின்றனர். இத்தகைய நபர்கள் கண் அழுத்த நோய் தங்களுக்கு இருக்கிறதா என்று அறிவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்." என்று கூறினார்.

    • நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம்.
    • முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    கடையம்:

    நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கிராம உதயம் மற்றும் கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

    நிறுவன தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார்,

    கடையம் வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் சாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கணேசன் ஒருங்கிணைத்தார்.

    ×